அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட 400 பேருக்கு ஈரானிய நீதிமன்றங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானிலுள்ள நீதிமன்றங்களினால் அவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பெண்களின் ஆடை உரிமைகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் ஈடுபட்ட இருவருக்கு ஈரான் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது