நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய அங்கத்தவர்கள்,ஆட்சிமன்றதெரிவும் கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு .புவநேஸ்வராஜா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26-11-2017) இடம்பெற்றது.
பாடசாலையின் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்திப் பணிகள்,செயற்பாடுகள்பற்றியும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியுள்ள முக்கியபணிகள் சம்பந்தமாகவும் அங்கு ஆராயப்பட்டன.
இதேவேளை புதிய ஆட்சிமன்ற அங்கத்தவர் தெரிவு நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் புதிய ஆட்சிமன்ற அங்கத்தவர்கள் வருமாறு
பழைய மாணவர் மன்றத்தின் புதிய தலைவராக திரு சிவலிங்கம் அவர்களும் , செயலாளராக திரு. லோகேஸ்வரன் அனுரா அவர்களும் , பொருளாளர் திரு. G. சசிதரன் அவர்களுக்கும் மற்றும் நான்கு உப தலைவர்களுக்கும் உப செயலாளருக்கும் உப பொருளாளர்களும் 19 மன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்ய பட்டனர்