ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுஅரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்

அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்

0Shares

பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

latest tamil news

சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர், கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

latest tamil news

‘ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு சட்டம் குறித்த மதிப்பீடு நிலுவையில் இருக்கிறது.முறையாக மனித உரிமைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மனித உரிமை நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமை என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அவர்களின் பாதுகாப்பு அல்லது பிற விளைவுகளுக்கு பயமின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு டிஜிட்டல் உரிமைகள் குழுவான ப்ரோபிரைவசி (Proprivacy) ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இது ‘பிராந்தியத்தில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் மனித உரிமைகள் இரண்டிற்கும் கிடைத்த வெற்றி எனவும், பங்குகள் உயர்ந்த நிலையில் இருந்தும், தண்டனைகள் மிகக் கடுமையாகவும் இருக்குமென்றாலும், வாட்ஸ் ஆப் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய செய்தி’ என தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவான பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, சீனாவை போன்று ஹாங்காங்கில் வாட்ஸ் ஆப்பிற்கு தடை விதிக்க வழிவகுக்குமென கூறப்படுகிறது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments