ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுஇந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா

0Shares

இந்தியாவில் நேற்று(ஜூன் 18) ஒரே நாளில் ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக அதிகரித்தது. நேற்று 336 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழப்பு 12,573 ஆக உயர்ந்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 04 ஆயிரத்து 711 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 10,386 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments