சுகாதார விதிமுறைகளை மீறினால் 6 மாத சிறைதண்டனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுமென உத்தரகாண்ட மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. முகக் கவசம் அணிவதன் ஊடாக வைரஸ் பரவலை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியுமென சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.