ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுவளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் அதி­கா­ரிகள் இல்லை

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் அதி­கா­ரிகள் இல்லை

18Shares

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து  முன்­னெச்­ச­ரிக்­கை­களை  தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக  வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையில் கடும் காற்று மற்றும் கன­மழை பெய்­து­வ­ரு­கின்ற நிலையில்  நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் குறித்து  முன்­ன­றி­வித்­தல்கள் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள போதும் இவ்  அறி­வித்­தல்கள் தமிழ் மொழியில் வெளி­யி­டப்­ப­டாது உள்­ள­தனால் தமிழ் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை  எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் உரிய பிரச்­சி­னை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

வளி­மண்­ட­ல­வியல்  திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி பகு­தி­களில் குறிப்­பிட்ட நேரத்­திற்கு  வானிலை முன்­னெச்­ச­ரிக்­கைகள் தொடர்­பான தக­வல்கள் வெளி­யி­டப்­பட்ட போதும் தமிழ் மொழி மூலம்

இறு­தி­யாக கடந்த 21ஆம் திக­தியே முன்­ன­றி­வித்­த­லொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய அனர்த்த நிலை­மைகள் தொடர்­பாக தமிழ் பேசும் மற்றும் வேறு மொழி தெரி­யா­த­வர்­க­ளுக்கு அது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களை அறிந்­து­கொள்­வதில் சிக்கல் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­திற்கு தமிழ் தெரிந்த அதி­கா­ரிகள் 4 பேரா­வது இருக்க வேண்டும். ஆனால் குறிப்­பிட்ட கட­மைக்­காக ஒருவர் கூட கிடை­யாது. இதற்

கான நிய­ம­னங்­களை வழங்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்கம் மற்றும் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­களின் பொறுப்­பே­யாகும் . இதன்­படி அவர்கள் குறித்த நிய­ம­னங்­களை வழங்கி ஊழி­யர்­களை பெற்­றுத்­தந்தால் எங்­களால் அதனை செய்ய முடியும். அதனை செய்­யாது எங்­களால் தமிழ் மொழியில் முன்­னெச்­ச­ரிக்­கை­களை விடுப்பது சிக்கலானதே. இவ்வாறான நெருக்கடி நிலைமைகளில் மக்கள் உடனடியாக தெளிவு பெறும் வகையில் மூன்று மொழிகளிலும் அறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும்.

ஆகவே இதனை அரசாங்கம் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

18Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments