உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு வந்துள்ளது.சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.உலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் 4,23,819 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 4,23,819 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,98,283 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1.46,972 பேர் குணமடைந்துள்ளனர்.8,501 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.