கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவேண்டிய விசேட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களும் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சகல வசதிகள் பற்றியும் ஆராயப்பட்டது.
நோயாளிகளை பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலையின் அனைத்து பிரிவினரின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில நிர்வாகக் குழுவினர் மூலம் சேவைகளை பெறுவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இவ் விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது