நாட்டில் ஏற்பட்டு ள்ள சீரற்ற காலநிலை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இன்றில் இருந்தே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இன்றில் இருந்தே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்திற்கும் பிரதமர் ரணில விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் தொடர்பான பெறுமதியினை உடனடியாக ஆராயுமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் மின் விநியோக தடை ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக வழமைக்கு கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் சேதமடைந்த வீடுகளை வழமைக்கு கொண்டு வருமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடனான பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தின் போது சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதன்போது கட்சி தலைவர்களும் அதிகாரிகளும் தமது யோசனைகளை முன்வைத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இன்றில் இருந்தே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்திற்கும் பிரதமர் ரணில விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் மின் விநியோக தடை ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக வழமைக்கு கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் சேதமடைந்த வீடுகளை வழமைக்கு கொண்டு வருமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் தொடர்பான பெறுமதியினை உடனடியாக ஆராயுமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு தொகை தற்போது மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.