இலங்கை டெஸ்ட் அணிக்கு தினேஷ் சந்திமாலும், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு உபுல் தரங்கவும் தலைவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் தலைமைப் பொறுப்பிலிருந்து உபுல்தரங்கவை நீக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்து இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு திரிமான்ன அல்லது திஸர பெரேரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அணித் தலைவராக உபுல் தரங்கவின் செயற்பாடுகள் போதாமையே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அணி வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கமளித்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய தொழில்நுட்ப ரீதியான போக்கு உபுல் தரங்கவிடம் இல்லை என்ப தால் அவ ருக்கு பதில் மாற்றுத் தலை வரை நியமிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.