ColourMedia
WhatsApp Channel
Homeஆன்மீகம்புனித வெள்ளி

புனித வெள்ளி

0Shares

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் மரித்தததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்து பிறப்பிப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், கிறிஸ்து பிறப்பிப்பதற்கு பின்பிருந்த காலம் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் கூறப்படுகிறது. பழைய ஏற்பட்டு காலங்களில் இருந்தவர்கள், தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஆட்டுக்கு குட்டியை பலியிடுவார்கள். ஆசாரியன் அந்த ஆட்டுக்குட்டியை பலியிட்டு அந்த இரத்தத்தை அவர்கள் மீது தெளித்தால், அவர்களது பாவம் மன்னிக்கப்பட்டது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. 

ஆனால்,

புதிய ஏற்பாடு காலத்தில், இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சி, அந்நாட்களில் தலைமை குருவாய் இருந்த காய்பாவின் மாமனாரான அன்னா அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். 

மக்கள் எல்லாருக்காகவும், மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியாக, சிலுவையில் பலியானார். இதனை தான் மக்கள் அனைவரும் புனித வெள்ளி என்று அனுசரிக்கின்றனர். 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments