ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுபன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது : மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

0Shares

இலங்­கையில் பல்­வேறு சமூக, கலா­சா­ரங்­க­ளைக்­கொண்ட மக்கள் வெவ்­வேறு சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற போதிலும் சமா­தா­ன­மா­கவும் ஐக்­கி­ய­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். இது சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­வ­துடன், பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­துள்­ளது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள ­தா­வது,

பண்­டைய காலம் முதலே எமது இந்த அழ­கிய தேசம் பல்­வேறு சமய, கலா­சார விழாக்­களின் ஊடாக தமது சக­வாழ்வை வெளிக்­காட்டி வந்­துள்­ளது. அரச அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெறும் இந்த அனைத்து நிகழ்­வு­களும் இலங்கை சமூ­கத்தில் பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும் நல்­லு­ற­வையும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

மூன்று தசாப்­த­கால கொடிய யுத்தம் நிறை­வ­டைந்­ததைத் தொடர்ந்து, அனைத்து சமூ­கங்­களும் ஒரு தாய் மக்­களைப் போல ஐக்­கி­யத்­து­டனும் சகோ­த­ரத்­து­வத்துடனும் முன்­மா­தி­ரி­யான ஒரு தேச­மாக சுபிட்­சத்தை நோக்கிச் செல்­வதே எமது எதிர்­பார்ப்­பாக காணப்­ப­டு­கின்­றது. உலகின் அனைத்து சம­யங்­களும் போதிக்கும் அன்பு, கருணை மற்றும் சகிப்­புத்­தன்­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இவ்­வ­ருட தேசிய மீலாத் விழா யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­றுதல் மிகச் சிறப்­பா­ன­தாகும்.

இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­துள்ள தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­களம் என்பவற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல முஸ் லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments