ColourMedia
WhatsApp Channel
Homeசிறப்புக்கட்டுரைகள்தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர். (சிறப்பு கட்டுரை படிக்க தவறாதீர்கள்)

தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர். (சிறப்பு கட்டுரை படிக்க தவறாதீர்கள்)

0Shares

கட்டுரை-தி.கஸ்தூரி

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக (CEO) தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரகுநாத பிச்சைற்கும் லக்ஷ்மியிற்கும் 1972ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை என்றழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது குடும்பத்தினரோடு சென்னை சென்று அவரது படிப்பைத் தொடர்ந்தார்.

பின்னர் ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.

பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார். வார்ட்டன் பொருளாதார கல்லூரியில் கல்வி கற்க கிடைத்த வாய்ப்பே இவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவரது வணிக அறிவை வளர்த்துக் கொண்டார்.

2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்த இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார்.

பின்னர் 2013ம் ஆண்டு ஆண்ட்ராய்டு பிரிவிற்கு தலைவரானார். மேலும் கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.

உலகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனமான கூகுள் மறுகட்டமைப்பு செய்து கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஆல்ஃபாபெட் நிறுவனம்.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5வது நிறுவனமாக விளங்குகிறது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்ஃபாபெட் என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிருவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமித்துள்ளார்கள்.

எனினும் லாரி பேஜ் , சேர்ஜி பிரின் இருவரும் தொடர்ந்தும் நிறுவன இயக்குநர்களாக செயல்படுவர் எனக் கூறியுள்ளார்கள்.

மேலும் அவர்கள் “ஆல்ஃபாபெட் நிறுவனத்தை இவரை விட சிறப்பாக யாராலும் வழிநடத்த முடியாது” என சுந்தர் பிச்சை குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு தனது நன்றியைத் சுந்தர் பிச்சை அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் CEOவாக நியமித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதற்காக லேரிக்கும் சேர்ஜேவிற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.” என்றும் “நம்மிடம் நேரம் காலமற்ற பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரமும் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

“உங்கள் தோல்விகளை எல்லாம் பெருமைக்குரிய அடையாளங்களாக அணிந்து கொள்ளுங்கள்” என்ற தாரக மந்திரம் தான் இத்தனை மணி மகுடங்களை சுந்தர் பிச்சைக்கு கொடுத்துள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை அதிலும் பல சாதனைகளை படைத்து தமிழருக்கு மேலும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

உண்மையில் கூகுள் உலகில் பல தகவல்கள் கொண்ட களஞ்சியமாகவும் தனி நபர் உட்பட பல நாடுகளையும் அவதானிக்கும் தொழிநுட்ப கடவுளாக உள்ளது அதனையே தலைமை தாங்கி அவதானிப்பது ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

உலக தமிழர்கள் சார்பாகவும், இலங்கை தமிழர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாழ்த்துக்கள் ஐயா.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments