எட்டாவது ஜனாதிபதி (நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அரசியல் யாப்புக்கு அமைவாக எழாவது) யை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்கமாகிறது.
மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும்.
ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களின் போது வாக்களிப்பு காலை 7மணி முதல் மாலை 4மணிவரையே வாக்களிப்பு இடம்டிபறுவது வழமை. இருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்..
அந்தத்த தேர்தலில் 1 கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்களிப்புக்காக தேசிய அடையாள அட்டை, அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், தமது பெயர், வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தல் ஒன்றை விடுத்தள்ளார். தேர்தல் கடமைகளை வினைத்திறனாகவும், நடுநிலையாகவும் மேற்கொளகின்றவர்கள் என்ற கௌரவம் அரச சேவையாளர்களுக்கு இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு இடம்பெறும் காலப்பகுதியில் வாக்கள்களுடனும், வேட்பாளர்களுடனும், அவர்களின் அனுமதி அளிக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், எவருக்கும் அச்சப்படாது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், நீதிமன்றத்திற்கும் மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டுமென தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதில் அறிவுறுத்தியுள்ளார். கடமையின்போது எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கக் கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்..