Site icon Colourmedia News

தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பம்

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு

தகைமைகள்:-

1. வயதெல்லை 18 தொடக்கம் 40 வயது வரை

2. க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி உட்பட மூன்று பாடங்களில் திறமைச் சித்தியுடன் கணிதம் உட்பட 06 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல்

3. க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டாம் மொழி சிங்களத்தில் குறைந்தது சாதாரண சித்தியை (S) பெற்றிருத்தல் அல்லதுதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிங்கள கற்கைநெறியினை (100 மணித்தியாலத்திற்கு மேற்பட்டது) பூர்த்தி செய்திருத்தல்அல்லதுஅரசகரும மொழிகள் திணைக்களம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்திருத்தல்.

4. க.பொ.த. (உ/த) பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தி பெற்றிருத்தல்..மேலதிக தகைமை:-க.பொ.த. (சா/த) பரீட்சையில் தமிழ் இலக்கியத்தில் திறமைச் சித்தி C பெற்றிருத்தல்கவனத்திற்கு

• இக் கற்கைநெறி முழுநேர மற்றும் பகுதி நேர (வார இறுதி நாட்கள்) 600 கற்கை மணித்தியாலங்களைக் கொண்டதாக அமையும்.

• இக் கற்கை நெறிக்கான முழுச் செலவினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதோடு கற்கை நெறியின் முடிவில் குறித்தகால எல்லைக்குள் பாடசாலையில் இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடல் வேண்டும்.

• கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் அரச உத்தியோக்த்தர்களுக்காக நடாத்தப்படும் மொழிக்கற்கை நெறிகளில் வளவாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைப்பதோடு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் மொழி ஆசிரியராக சேவையாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அடிப்படைத் தகைமைகள் பூர்த்தி செய்த விண்ணப்பதாராகள் தமது முதல் மொழியில் 1/2 மணித்தியால எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுவர்.

மேற்படி தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து (கல்வி மற்றும் ஏனைய மொழித் தகைமைகளுடனான சான்றிதழ்களின் உண்மைப் பிரதிகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன்) 31.05.2019 திகதிக்கு முன்னதாக பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில்

“ மொழி ஆசிரியர் – பயிற்சி – தமிழ் – 2019 ” மற்றும் வதிவிட மாவட்டத்தை குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.

பணிப்பாளர் நாயகம்தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,இல.321/1, ஹைலெவல் வீதி, மாகும்புர,பன்னிபிட்டிய தொலைபேசி இல: 0113-092903மாதிரி விண்ணப்பப் படிவம்(இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பம்)1) முழுப்பெயர் : ………………………………

2) முகவரி : ……………………………………………………………

3) பிறந்த திகதி :………………………………..

4) பால் : ………………………………….

5) தொடர்பு இல : வதிவிடம் : …………………………………………

.கையடக்கத் தொ. பேசி :…………………………………

மின்னஞ்சல் :…………………………………

6) தேசிய அடையாள அட்டை இலக்கம் :……………………………..

7) மாவட்டம் : …………………………………….

8) பிரதேச செயலகப் பிரிவு : ……………………………………

9) மொழி மூலம் (ஊடகம்): சிங்களம் தமிழ்10) கல்வித் தகைமைகள்க.

பொ.த சாதாரண தரம் வருடம் : …………………..

தொ.இ பாடங்கள் பெறுபேறு

1

2

3

6

9

10

க.பொ.த உயர்தரம் வருடம் : ……………………

தொ.இ பாடங்கள் பெறுபேறு

1

2

4

(a) டிப்ளோமா : …………………………………

(b) பட்டப்படிப்பு : …………………………

(c) பட்டப்படிப்பின் பிந்திய படிப்பு : …………………………

(d) வேறு : ……………………………………………………………………….

11) இரண்டாம் மொழிப் புலமை தொடர்பான கல்வித் தகைமைகள் :………………………………………………………………………………………………………………………….

12) மொழிப் புலமை தொடர்பான அனுபவம் : …………………………………….

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானதெனவும் சரியானதெனவும் என்னால் உறுதிப்படுத்தப்படுகின்றது.

 திகதி கையொப்பம்

Exit mobile version