Site icon Colourmedia News

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய காவற்துறை தலைமையகத்தினால் விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில் உள்ளது.

Exit mobile version