கடந்த மார்ச் மாதம் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் 1.08கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் சிலாபம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் தமிழ் பெர்ணாந்து(37வயது), ரஞ்சித் குமார் பெர்ணாந்து(42) ஆகியோராவர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையின் போது தாங்கள் நீர்கொழும்பில் விற்பனைக்கு கொண்டுவந்த போதைப்பொருள் சிலாபம் மாநகரசபை உறுப்பினர் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சி) வர்ணகுலசூரிய ஸ்டேண்லி லாவுஸ் பர்னாந்து(65வயது) என்பவருக்கு சொந்தமானது என்றும் நீர்கொழும்பில் வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக தங்களிடம் அனுப்பிவைத்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதந்தபோது கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாகியிருந்த
சிலாபம் மாநகரசபை உறுப்பினர் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சி) வர்ணகுலசூரிய ஸ்டேண்லி லாவுஸ் பர்னாந்து என்பவர் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய தன்கொடுவ பகுதியில் வைத்து நேற்று கைது செய்ய பட்டதாக நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.