Site icon Colourmedia News

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில் இடம்பெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று  நான்கு போட்டிகள் முடிவடைந்தன.

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியின் சொந்த ஆடுகளத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணியினை வீழ்த்தி தொடரில் தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் அபாரமான முதல் இன்னிங்சினை (332) அடுத்து பண்டாரநாயக்க கல்லூரிக்கு தமது முதல் இன்னிங்சில் 125 ஓட்டங்களையே பெற முடிந்தது. பலோவ் ஒன் முறையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய கம்பஹா வீரர்களுக்கு எதிரணியின் இமாலய ஓட்டங்களை தாண்ட முடியவில்லை. அவர்கள் வெறும் 138 ஓட்டங்களைப்பெற்று இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர்.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பசிந்து உஸ்ஹெட்டி மற்றும் நவீன் பெர்னாந்து ஆகியோர் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியினை ஊர்ஜிதம் செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 332/9d (52.1) ரோஷான் பெர்னாந்து 71,சத்துர அனுராத 53, கெவின் பெரேரா 45, ஜனிது வத்சல 4/70

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 125 (25.4) கயஷான் துலஞ்சன 30, நவீன் பெர்னாந்து 3/31, அவீஷ கேஷன் 3/38

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o–138 (33.4) ஜனிது ஜயவர்த்தன 54, ரவிமல் அல்விஸ் 25, பசிந்து உஸ்ஹெட்டி 4/48, நவீன் பெர்னாந்து 3/27

Exit mobile version