Site icon Colourmedia News

தமிழ்நாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட, டிடிவி தினகரன் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

 

அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தினகரன் 89013 வாக்குகள் பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழனை விட 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்று இருந்தார். இதனையடுத்து இந்த தேர்தலில் தினகரன் ஜெயலலிதாவை விட 1,162 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:-

 

 

2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் விவரம்:-

 

Exit mobile version