கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
முதலாம் கட்ட விடைத்தாள் திருத்ததப் பணிகள் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
விடைத்தாள் திருத்தப் பணிகள் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்;வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, 30ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.