ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றதையடுத்து, நேற்று நீர்கொழும்பு நகரில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆரவாரம் செய்யப்பட்டது.
இதன்போது நீர்கொழும்பு நகரில் மணிக்கூட்டு முன்பாக பட்டாசு வெடித்து,பாற்சோறு வழங்கி அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டு கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வின் போது,நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், நகரவாசிகள் என பலரும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.