ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்று நீர்கொழும்பு கொச்சிக்கடை ரானோவெல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ஸ,நாமல் ராஜபக்ஸ,பந்துல்ல குணவர்த்தன,ஜொன்ஸ்டன் பர்னாந்து,அருந்திக்க பர்னாந்து, D.V.ஜானக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ மற்றும் பொதுஜன முன்னணி சார்பாக உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ
மாகம்புர துறைமுகம் விற்பனைச் செய்யப்பட்ட பணம் திறைச்சேரிக்குச் செல்லவில்லை.
அது இலங்கை வங்கியில் வேறு முறையில் வைப்பிலிடப்பட்டதாக தாம் அறிந்துகொண்டுள்ளதாக மகிந்த குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், வீதி அமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு அவப்பெயர் வாங்க விரும்பவில்லை.
அதன் காரணத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச
ஸ்ரீ லங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியான கூட்டு எதிர்கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கி உள்ளோம்.
இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடும் அனைவரும் எம்மோடு கைகோர்த்து உள்ளனர்.
அரசாங்கம் தற்போது மிகவும் பின்தள்ளப்பட்டு உள்ளது.
பின் தள்ளப்பட்ட அரசாங்கம் தற்போது நிதி உதவி என்ற பெயரில் கடன் திட்டங்களை வழங்கி வருகின்றது.
உலக வரலாற்றில் நிதி உதவி என்ற பெயரில் கடன் வழங்கியுள்ள அரசாங்கம் இந்த நல்லாட்சி அரசாங்கம் தான்.
எங்காவது நிது உதவியை கடன் என்று கூறுவார்களா? அல்லது வட்டி வசூல் செய்வார்களா?
ஆகையால் இந்த அரசு மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியை தக்க வைக்கக் முயற்சி செய்கின்றது.
பொலிஸாரும்,தேர்தல் ஆணையாளரும் இந்த செயல்களை நீதியனதாக பார்க்கின்றனர் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
மக்கள் இம்முறை இந்த நல்லாசி என்ற அரசாங்கத்திடம் ஏமாறப்போவதில்லை என்று கூறினார்.