சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொதுமக்கள் சுகாதாரப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பிலான திட்டங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
96 சதவீதமான சிறுவர்கள் அயலவர்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களினாலே யேதுஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஷ்வனி பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என பொதுமக்கள் வைத்தியநிபுணர்கள் சங்கத்தின்தலைவர் ஜானகி விதாரண சுட்டிக்காட்டினார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாக அதன் உதவிப்பணிப்பாளர் சட்டத்தரணி சாலி அபேவர்தன தெரிவித்தார்.