நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என கூறியும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர்ந்து 8வது நாளாகவும் சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இச் சத்தியாகிரக போராட்டத்தில் 7வது நாளான நேற்றையதினம் நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவரும், நீர்கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளருமான ரொய்ஸ் விஜித பர்னாந்து உட்பட நீர்கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.