கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொடை வீதி, களனி பாலம் வரையிலான வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
புதிய களனி பாலத்தின் கட்டுமான பணிகள் காரணமாக நாளை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் அறிவித்தள்ளது.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.