ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியபிரமாண நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
இதில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர, சபாநாயகருக்கு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.