Site icon Colourmedia News

நீர்கொழும்பு கல்விவலயத்தில் தமிழ் மொழிமூலமாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி  நாடுமுழுவதும்  நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன .

கொழும்பு பாடசாலைகளின் அதிபர்கள் இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வந்து பெறுபேற்று ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலில் சேர்க்கப்படும். பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பெறுபேறுகளை பார்வையிடலாம். அதன் முகவரி www.doenets.lk என்பதாகும்.

இம்முறை அனைத்து  மாவட்டங்களுக்கும் வெட்டுப்புள்ளிகள் கடந்த ஆண்டைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கம்பஹா மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 165 அதிகரிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி158 இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வெட்டு புள்ளிகள் அடிப்படையில் நீர்கொழும்பு கல்வி வலயத்தில் இம்முறை தமிழ் மொழிமூலமாக தோற்றிய மாணவர்களில் மொத்தமாக 18 மாணவர்கள் சித்தியடைந்து உள்ளனர்.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் 11 மாணவர்களும் (அதி கூடியப்புள்ளி -184)

நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் 6 மாணவர்களும் (அதி கூடியப்புள்ளி -188) கம்பஹா மாவட்டத்தில் 3ம் இடம் நீர்கொழும்பு கல்வி வலயம் தமிழ்மொழிமூலம் 1ம் இடம்

நீர்கொழும்பு அல்பஹால் மாகாவித்தியாலயத்தில் 01மாணவரும் (புள்ளிகள்-174)

சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை நாடுமுழுவதும்  மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.

அதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகை 500 ரூபாவிலிருந்து 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் தொகை கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version