Site icon Colourmedia News

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (3-10-2018) சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹானுக்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன் ஆசிரிய ஆலோசகர் மஹ்பூப் மரிக்கார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினர்.

சிறுவர் தினம், மற்றும் ஆசிரியர் தினம் தொடர்பான உரைகளை சிறப்பு விருந்தினர்கள் நிகழ்த்தினர். ஆசிரிய ஆலோசகர் மஹ்பூப் மரிக்கார் சிறுவர் தினம் தொடர்பான உரையைiயும், ஆசிரிய ஆலோசகர ஜி. ஜெகநாதன் ஆசிரியர் தினம் தொடர்பான உரையையும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் பெற்றோர்கள், அருட் சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன நிகழ்வில் இடம்பெற்றன.

ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களும் பாடசாலை அதிபரினால் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை ஆசிரியர்கள் சார்பில் அதிபர் அதிபர் எம். இஸட். ஷாஜஹானுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நன்றி உரையை ஆசிரியை எம். நேசமலர் நிகழ்த்தினார்.

Exit mobile version