Site icon Colourmedia News

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வீடொன்றில் பூமரங்களை வளர்ப்பது போன்று கஞ்சா செடிகளை  பயிர்  செய்த நபர் ஒருவர் கைது

நீர்கொழும்பு கொச்சிக்கடை மடம்பெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் பூமரங்களை வளர்ப்பது போன்று பூச்சாடிகளில் கஞ்சா செடிகளை  பயிர்  செய்த நபர் ஒருவரை இன்று(23)  நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூமரங்களை வளர்ப்பது போன்று 50 பூச்சாடிகளில் பூக்கன்றுகளுக்கு இடையிடையில்  12 கஞ்சா செடிகளை கைப்பட்றியதாகவும்  கைப்பற்ற பட்ட கஞ்சா செடிகள் 5Kg  எடை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 மிக நீண்டகாலமாக மிகவும் சூட்சமமாக முறையில் இவ்வாறு கஞ்சா பயிர்ச்செய்கை இடம்பெற்று சந்தேகநபரால் கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் குறித்தப்பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனையில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நாளை(24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

Exit mobile version