ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்க விஷேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணைக்காகவே அவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று (24) சென்றுள்ளார்.
குறித்த வழக்கை விசாரணை செய்த விஷேட மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.