Site icon Colourmedia News

வரலக்ஷ்மி விரதம்

இன்று வரலக்ஷ்மி விரத தினமாகும்(24)  வரலக்ஷ்மி விரதம் என்பது இந்து பெண்களினால் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாகும்.

ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும்.

அந்த வகையில் இன்றைய தினம் வரலக்ஷ்மி விரதம் இந்துக்களினால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வரலக்ஷ்மி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விரதம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில் இந்த விரதத்தை பரமசிவன் அன்னை பார்வதிக்கு குடும்ப வளத்திற்காக செய்ய வேண்டி  பரிந்துரைத்தாராம்.

 

வரலக்ஷ்மி என்பதன் அர்த்தமென்ன?

 

வரம் என்றால் கேட்ட வரம் எனப் பொருள். லக்ஷ்மி என்பவர் செல்வத்தை அள்ளி தரும் அன்னை. கேட்ட வரமும் செல்வமும் நல்குபவளே வரலக்ஷ்மி. லக்ஷ்மி தேவியின் அம்சம்.இந்த விரதத்தை பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக பேணுகிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் வாழ்வில் வளமுடன் வாழ வரலட்சுமியை வேண்டுகிறார்கள். விரதமிருந்து பூஜை செய்கிறார்கள்.

 

வரலக்ஷ்மி விரதத்தின் பின்னணி கதை

முன்பு ஒரு காலத்தில் மகத நாட்டில் குந்தினி என்ற நகரத்தில் சாருமதி என்று ஒரு பெண்ணிருந்தாள். அவள் தனது  கணவனோடு இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அவளது குடும்பத்தினரிடம் இருந்த அக்கறையை கண்ட அன்னை மகாலட்சுமி அவள் கனவில் தோன்றி வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்க அனுக்ரகம் செய்தாள். இந்த விரதத்தை ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும் எனவும் கூறினாள். இதனால் அவளது குடும்பத்தில் வளம் பெருகும் என்றாள்.

சாருமதியும் தனது கனவினை குடும்பத்தினரிடம் கூற அவர்களும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை ஈன்றனர். முடிந்த உதவிகளை செய்தனர்.ஊரில் இருந்த மற்ற பெண்களும் பூஜையில் கலந்து கொண்டு வரலட்சுமிக்கு இனிப்புகளை நெய்வேத்யமாக அளித்தார்கள்.

இந்த விரத பூஜையால் மனம் மகிழ்ந்த வரலக்ஷ்மி அன்னை சாருமதிக்கு எல்லா நலன்களையும் அருளினாள்.அவள் குடும்பமும் சுபிக்ஷமாக இருந்தது.

வரலக்ஷ்மி விரத பூஜை முறை

வரலக்ஷ்மி விரத பலன்கள்

வரலக்ஷ்மி விரதமிருந்தால் பெண்டிருக்கு மட்டுமன்றி குடும்பத்தினருக்கும் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், வளம் பெருகுகிறது.

சில பெண்டிர் புத்திர சௌபாக்கியம் வேண்டி வரலக்ஷ்மி பூஜை செய்கிறார்கள்.

வரலக்ஷ்மி பூஜை செய்தால் அஷ்ட லக்ஷ்மிகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கிறது. ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி , சந்தானலக்ஷ்மி, ஐஸ்வர்யலக்ஷ்மி   அஷ்ட லக்ஷ்மிகள் ஆவார்கள்.  இவர்களின் நல்லாசி வரலக்ஷ்மி விரத பூஜை வாயிலாக கிட்டுகிறது. அந்தந்த பலன்களும் ஏற்படுகின்றன.

வரலக்ஷ்மி பூஜை செய்து லக்ஷ்மி தேவியின் அருள் பெறுங்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு காரணமாகுங்கள்..

 

Exit mobile version