Site icon Colourmedia News

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த  வெள்ளிக்கிழமை (24) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே, மேல் மாகாண அமைச்சர் லலித் வணிகரத்ன, நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து, பிரதிக் கல்விப் பணிப்பாளர் சமிந்த பெர்னாந்து, கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்ற நீர்கொழும்பு ஹரிச்சத்திர தேசிய கல்லூரி மாணவன் தினுக கிரிசான் குமார உட்பட சிங்கள தமிழ் மொழிப் பாடசாலைகளில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாந்து புள்ளே, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்ற நீர்கொழும்பு ஹரிச்நத்திர தேசிய கல்லூரி மாணவன் தினுக கிரிசான் குமார ஆகியோர் அங்கு உரையாற்றினார்.

 

Exit mobile version