Site icon Colourmedia News

இலங்கையின் வெற்றி நடை தொடருமா? இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது போட்டி இன்று

தரம்­சாலா போட்­டியில் அபார வெற்­றி­யீட்­டிய இலங்கை அணி மொஹா­லியில் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யிலும் வெற்­றி­யீட்டி தொடரை வெல்லும் முனைப்பில் உள்­ளது.

மறு­மு­னையில் படு­தோல்­வி­ய­டைந்த இந்­தியா, இன்­றைய இரண்­டா­வது போட்­டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்­கத்தில் உள்­ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்­தி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரை இந்­தியா 1–-0 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது.

இந்­நி­லையில் மூன்று போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது.

இதில் தரம்­சா­லாவில் நடை­பெற்ற முதல் போட்­டியில் இலங்கை 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

இதன் மூலம் இலங்கை அணி 1-–0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி மொஹா­லியில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்­டியில் வெற்றிபெற வேண்­டிய நெருக்­க­டியில் இந்­திய அணி இருக்­கி­றது. ஏனென்றால் தோற்றால் அவ்வணி தொடரை இழந்­து­விடும்.

தொடர்ச்­சி­யாக 7 ஒருநாள் தொடர்களை வென்ற இந்­திய அணி, அந்த பெரு­மையை இழக்­காமல் இருக்க வெற்­றிக்­காக கடு­மை­யாக போராடும். மேலும் தரம்­சா­லாவில் ஏற்­பட்ட மோச­மான தோல்­விக்கு பதி­லடி கொடுக்கும் ஆர்­வத்தில் உள்­ளது. முதல் போட்­டியில் இந்­திய வீரர்களின் துடுப்­பாட்டம் மிகவும் மோச­மாக இருந்­தது.

அனு­பவம் வாய்ந்த முன்னாள் தலைவர் டோனி ஒருவர் மட்­டுமே சிறப்­பான பங்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தினார். மோச­மான துடுப்­பாட்­டத்­தினால் வீரர்கள் தேர்வில் தலைவர் ரோஹித் ஷர்மா மாற்றம் செய்­வாரா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி மீண்டும் இந்­தி­யாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்­வத்­துடன் உள்­ளது.

தரம்­சாலா போட்­டியில் விளை­யா­டிய உத்­வே­கத்தை இன்­றைய போட்­டி­யிலும் திஸர பெரேரா தலை­மை­யி­லான இலங்கை அணி பின்­பற்றும்.

இரு அணி­களும் வெற்­றிக்­காக கடு­மை­யாக போரா­டும் என்­பதால் இன்­றைய மொஹாலி போட்டி விறு­வி­றுப்­பாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இரு அணி­களும் இன்று மோது­வது 157ஆ-வது போட்­டி ­யாகும். இது­வரை நடந்த 156 போட்­டி­களில் இந்­தியா 88 போட்டிகளிலும், இலங்கை 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 12 போட்டிகள் வெற்றி. தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.

இன்றைய போட்டி முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்ப மாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version