Site icon Colourmedia News

புதிதாக ஏழுதப்படுமா போர் வரலாறு?

ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை  

போர் வர­லாறு என்னும் போது, இலங்கை இரா­ணு­வத்தின்உண்­மை­யான போர் வர­லாற்றை எழுத வேண்­டு­மானால், அதன்உண்­மை­யான பிம்­பத்தை வெளிப்படுத்த வேண்­டு­மானால், விடு­தலைப் புலி­களின் உண்­மை­யான வரலாறும் வெளிப்­­டுத்­தப்­பட வேண்­டி­ யி­ருக்கும்

எதி­ரியின் பலத்தை சரி­யாக வெளிப்­­டுத்­து­வது தான் ஒரு இரா­ணு­வத்தின் பலத்­தையும், வீரத்­தையும் உண்­மை­யாக வெளிக் கொண்டு வரும்.

விடு­தலைப் புலி­களைஎதி­ரி­யாக கொண்­டதால் தான், இலங்கை இராணுவத்துக்குசர்­­தேச புகழ் கிடைத்­தது.” 

போர் முடிந்து பத்து ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும், போர் வரலாற்றின் ஒரு பகுதியையாவது நடுநிலையோடும் உண்மையோடும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழர் தரப்பில் இருந்து எந்தவொரு ஆவணமும் வெளிவராதமை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தமிழர் தரப்பில் உள்ள பெருங் குறைபாடு என்பதா, அக்கறையீனம் என்பதா? என்று தெரியவில்லை.

விடு­தலைப் புலி­­ளுக்கு எதி­ரான மூன்று தசாப்த காலப் போரை, முறை­யாக ஆவ­ணப்­­டுத்தும் ஒரு முயற்­சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறங்கி­யி­ருப்­­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. கடந்த வாரம் ஆங்­கில வார­இதழ் ஒன்று தான் இது­பற்­றிய தக­வல்­களை வெளிப்­­டுத்­தி­யி­ருந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்பின் பேரில், முன்னாள் படைத் தளபதிகள் கடந்த 6ஆம் திகதி இரவு ஒரு இர­க­சிய சந்­திப்­புக்குச் சென்­றி­ருந்­தனர்.

அந்தச் சந்­திப்பு பற்­றியோ அதில் பேசப்­பட்ட விட­யங்கள் பற்­றியோ வெளியில் எந்த தக­வல்­களும் வெளி­யி­டப்­படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்­ளப்­பட்­டது.

முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள் ஜெனரல் ஜெரி டி சில்வா, ஜெனரல் லயனல் பலகல்ல, முன்னாள் விமா­னப்­படைத் தள­பதி எயர் மார்ஷல் ஜெயலத் வீரக்­கொடி மற்றும் எயர் சீவ் மார்ஷல் பத்மன் மென்டிஸ், முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் அட்மிரல் தயா சந்­த­கிரி, அட்­மிரல் பசில் குண­சே­கர, அட்­மிரல் சிசில் திசேரா மற்றும், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன, இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­படைத் தள­ப­திகள், பாது­காப்புச் செயலர் உள்­ளிட்ட 25 பேர் வரை அந்தச் சந்­திப்பில் பங்­கேற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஆனாலும், இந்தக் கூட்­டத்தில் இரண்டு முக்­கி­ய­மா­ன­வர்கள் பங்கேற்­க­வில்லை. ஒருவர் இறு­திக்­கட்டப் போரில் இரா­ணுவத் தளபதியாக இருந்து, வியூ­கங்­களை வகுத்து, தலைமை தாங்­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா.

இன்­னொ­ருவர், புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கு அர­சியல் ரீதி­யான ஆத­ரவை உறுதிப்ப­டுத்தி, போரை ஒருங்­கி­ணைத்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ.

கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது அமெ­ரிக்­காவில் இருக்­கிறார். அதனால் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவரால் இதில் பங்கேற்­றி­ருக்க முடி­யாது.

ஆனால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா நாட்டில் இருந்­தாலும், அவர் இந்தக் கூட்டத்தில் பங்­கேற்­க­வில்லை. சரத்பொன்சேகாவுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் சரி­யான உறவுகள் இல்லை. இதனால் அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டாமல் தவிர்க்கப்­பட்­டதா அல்­லது சரத் பொன்­சே­காவே அழைப்பை புறக்கணித்­தாரா என்று தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போர் பற்றிய ஒரு முழுமையான வர­லாற்றைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்­கி­யி­ருக்­கிறார். ஆனால் அதற்­காக அவர் கையாள முற்­பட்­டுள்ள வழி­மு­றைகள் கடு­மை­யான விமர்சனங்­களை ஏற்படுத்­தி­யி­ருக்­கி­றது.

மேற்­படி சந்­திப்பில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, போர் பற்­றிய உண்மை­யான சம்பவங்­களைக் கொண்­ட­தாக வர­லாற்று ஆவணம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளியா­கி­யி­ருக்­கின்­றன.

போர் முடிந்த பின்னர், இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­ப­டையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர், போர் வர­லாற்று நூல்­களை எழுதியிருக்கி­றார்கள்.

‘கோத்­தாவின் போர்’ என்ற பெயரில் சிங்­கள ஊட­க­வி­ய­லாளர் சந்­திர பிரே­மவும் ஒரு நூலை எழு­தி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான நூல்­களின் பின்­னணி, போரின் உண்­மை­யான பரிமாணத்தை வெளிப்ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, சிலரை கதாநாயகர்­க­ளாக காட்டும் முயற்சியாகவே இருப்­ப­தாக எழுந்திருக்கும் விமர்­ச­னங்கள் பற்­றியும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்­பட்­டுள்­ளது.

நந்­திக்­க­ட­லுக்­கான பாதை என்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல், அவர் தன்னை இலங்கை இரா­ணு­வத்தின் ‘ரம்போ’­வாக காண்­பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்­ளது என்றும் விமர்­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான மிகை­யான – அல்­லது பக்கச் சார்­பான தக­வல்­களில் இருந்து விலகி, ஒரு முறை­யான வர­லாற்று நூலை எழுதும் முயற்சியாகத் தான், முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­களைச் சந்தித்தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்று கூறப்படு­கி­றது.

அவ்­வா­றான ஒரு முழு­மை­யான வர­லாற்றை எழு­து­வ­தற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்தால், பக்கச் சார்­பற்­ற­தாக எல்லாத் தரப்பு விட­யங்­க­ளையும் உள்ளடக்கிய நடு­நி­லை­யான ஒன்­றாக அதனை வெளி­யிட எண்­ணினால், அது சர்வதேச அளவில் வர­வேற்­புக்­கு­ரிய ஒன்­றாக இருக்கும்.

ஏற்­க­னவே இலங்­கையின் வர­லாற்றை ஒட்­டி­ய­தாக எழு­தப்­பட்ட மகா­வம்சம், சூளவம்சம், தீப­வம்சம், ஆகி­ய­வற்­றிலும் சரி, கோத்தாவின் போர், நந்­திக்­க­ட­லுக்­கான பாதை, ஒரு போர் வீரனின் பதிப்பு, கடலில் சமச்­சீ­ரற்ற போர்­முறை, அதிஷ்­டா­னய போன்ற போர் வர­லாறு தொடர்­பான நூல்­க­ளிலும் சரி, ஒரு பக்க வர­லாறு அல்­லது பக்கச் சார்­பான தக­வல்கள், தர­வுகள் தான் இடம்பெற்றுள்ளன.

இலங்­கையின் வர­லாற்றைப் பதிவு செய்­வதில், சிங்­கள மன்­னர்கள், தொடக்கம் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வரை­யி­லான ஆட்­சி­யா­ளர்கள் உறு­தி­யா­கவே இருந்து வந்திரக்கிறார்கள்.

மகா­வம்­சத்தின் இணைப்­பாக, 1978 தொடக்கம், 2010 வரை­யான காலத்தில் வரலாற்றை ஆவ­ணப்­ப­டுத்தும் பணி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் முன்னெடுக்­கப்­பட்­டது. ஜே.ஆர் ஜெய­வர்த்­தன தொடக்கம், பிரே­ம­தாச, டி.பி.விஜேதுங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலங்களின் வர­லாற்றை அந்த இணைப்பில் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

ஆனால் அந்த வர­லாற்று ஆவ­ணத் தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சே­கா­வுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. சரத் பொன்­சேகா என்ற பெய­ரு­டைய ஒரு இரா­ணுவத் தள­பதி இலங்­கையில் இருந்தார் என்ற பதிவைக் கூட விட்டுச் செல்ல மஹிந்த ராஜபக் ஷ விரும்­ப­வில்லை.

இவ்­வா­றாக தமக்குச் சாத­க­மான வர­லாற்றை எழுத முற்­பட்­டதால் தான், சிங்­கள மன்னர்கள், தள­ப­திகள், ஆட்­சி­யா­ளர்­களால் எழுதப்பட்ட வர­லாற்று நூல்கள் எல்லோரதும் அங்­கீ­கா­ரத்தைப் பெற முடி­யா­த­தாக இருக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது முன்னெடுத்திருக்கின்ற போர் வரலாற்றை ஆவ­ண­மாக்கும் முயற்சியும் கூட, நியா­ய­மா­ன­தாக- பக்கச் சார்­பற்­ற­தாக எழுதப்படுமா என்ற கேள்­விகள் உள்­ளன.

இறு­திக்­கட்டப் போரில் முக்­கிய பங்­காற்­றிய சரத் பொன்­சே­காவோ, கோத்­தா­பய ராஜபக் ஷவோ பங்­கேற்­காத கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டதும், இறு­திக்­கட்டப் போரில் பங்­கெ­டுத்த முன்னாள் இரா­ணுவத் தள­ப­திகள் எவரும் சந்­திப்­புக்கு அழைக்கப்­ப­டா­ததும், இந்தச் சந்­தே­கங்­களை எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.

இலங்கை இரா­ணு­வத்தின் உண்­மை­யான போர் வர­லாற்றை எழுத வேண்­டு­மானால், அதன் உண்­மை­யான பிம்­பத்தை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மானால், விடு­தலைப் புலிகளின் உண்­மை­யான வர­லாறும் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யி­ருக்கும்.

எதி­ரியின் பலத்தை சரி­யாக வெளிப்­ப­டுத்­து­வது தான் ஒரு இராணுவத்தின் பலத்தையும், வீரத்­தையும் உண்­மை­யாக வெளிக் கொண்டு வரும். விடு­தலைப் புலிகளை எதி­ரி­யாக கொண்­டதால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு சர்­வ­தேச புகழ் கிடைத்­தது.

அந்­த­ள­வுக்கு புலி­களின் வீரமும் பலமும் இருந்­தது. அதனை சரி­யாக மதிப்­பி­டாமல், தெளி­வாக குறிப்­பி­டாமல் வர­லாறு எழு­தப்­பட்டால், அது ஒரு­போதும் நியா­ய­மா­னதாக, உண்­மை­யா­ன­தாக பக்கச் சார்பற்­ற­தாக ஏற்றுக் கொள்­ளப்­ப­டாது.

அது மாத்­தி­ர­மன்றி இந்தப் போரில் இலங்கை இரா­ணுவம் மிகப் பெரி­ய­ள­வி­லான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளையும் எதிர்கொண்டிருக்கி­றது. இந்தக் குற்­றச்­சாட்­டுகள் குறித்த நேர்மையான பதிவுகளையும், அதற்கான பதில்களையும் கூட வரலாற்று ஆவணம் கொண்டிருந்தால் தான், அது உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

அதேவேளை, போரில் வெற்றியைப் பெற்ற தரப்பான அரச படைகளிலுள்ள அதிகாரிகளும், அரசாங்கமும் போர் தொடர்பான வரலாற்று ஆவணங்களை அதிகளவில் வெளியிட்டு வருகின்ற நிலையில், ஏராளமான போர் வரலாற்று தகவல்களைக் கொண்ட தமிழர் தரப்பில் இருந்து அத்தகைய வரலாற்று ஆவணங்கள் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன.

போர் முடிந்து பத்து ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும், போர் வரலாற்றின் ஒரு பகுதியையாவது நடுநிலையோடும் உண்மையோடும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தமிழர் தரப்பில் இருந்து எந்தவொரு ஆவணமும் வெளிவராதமை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் தமிழர் தரப்பில் உள்ள பெருங் குறைபாடு என்பதா, அக்கறையீனம் என்பதா? என்று தெரியவில்லை.

Exit mobile version