லக்கல பகுதியில் தனது பதின்மூன்று வயது மகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தாயையும் குறித்த சிறுமியையும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குறித்த தாய் மீது பிரதேசவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த விடயம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வேளை பார்த்துக் காத்திருந்த பொலிஸார், குறித்த சிறுமியை சந்தேக நபர் ஒருவர் நாவுல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமியையும் சந்தேக நபரையும் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.
மேற்படி விடுதி, அப்பகுதியின் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவருக்குச் சொந்தமானது என்றும் மணித்தியாலத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீதும் புகார் பதிவாகியுள்ளது.