Site icon Colourmedia News

தொடரூந்து தொழிற்சங்க பணிப்புறக்கணிபு முடிவு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தொடரூந்து தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தொடரூந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததன் காரணமாக பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது முதல் அனைத்து தொடரூந்து சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரூந்து தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கடந்த 8ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version