Site icon Colourmedia News

போதை மாத்திரைகளுடன் யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது

இந்தியாவில் இருந்து கொண்டு வந்த 70,000 இற்கும் அதிக தொகையுடைய போதை மாத்திரைகளை இந்த நாட்டில் விநியோகம் செய்வதற்காக எடுத்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

20 வயதுடைய யுவதியும் 23 வயதுடைய இளைஞரும் இவற்றை விநியோகத்திற்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக செட்டிக்குளம் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. 

மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகரிடம் இவற்றைப் பெற்றுக் கொண்டுகொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு இவற்றை விநியோகிப்பதாக தெரிய வந்துள்ளது. 

யாழ்ப்பாண மாவட்ட விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செட்டிக்குளம் பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக செட்டிக்குளம் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. 

சந்தேகநபர்கள் வவுனியா நீதவவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version