புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று 4 வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் குறித்த வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
எனினும் தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை செவிசாய்க்கவில்லை என்று புகையிரத காப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பீ.எம்.பி. பீரிஸ் கூறினார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் சில விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், இன்றையதினம் அவற்றையும் நிறுத்துவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.