Site icon Colourmedia News

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்

முல்லைதீவு  முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர்.

 

அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிரதான பொதுச் சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா  ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது.

இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும் கலந்துகொண்டவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.

சுமாா் ஆயிரத்துக்கும் அதிகமான  பொது மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version