Site icon Colourmedia News

அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்பு கொள்ள வலியுறுத்தல்

கா.பொ,தா  உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப்பரீட்சை செப்ரெம்பர் 1ம் திகதி வரை நாடெங்கிலும் உள்ள 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை 77 ஆயிரத்து 323 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகிறார்கள். இவர்களுக்காக அனுமதி அட்டைகள் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுவரை அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்தி எவரேனும் இருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத் தள முகவரி www.doenets.lk என்பதாகும்.

0112-784-208 அல்லது 0112-748-537 என்ற தொலைபேசி மூலம் விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Exit mobile version