மாத்தறை நகரில் தங்க ஆபரண விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த வேளை கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை இன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பொது மயானத்தில் இன்று பிற்பகல் இந்த இறுதிக் கிரியை நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சந்தேக நபர்களில் இரண்டு பேர் இன்றைய தினம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு சந்தேக நபர் காவல்துறை பாதுகாப்பில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கடந்த 22 ஆம் திகதி மாத்தறை நகரில் தங்க ஆபாரண விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளை, கொள்ளை குழுவிற்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி மோதல் இடம்பெற்றது.
இதன்போது கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை உத்தியோகத்தர், சுரங்க பிரதீப் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி உதவி ஹிரு செய்திச்சேவை
https://www.youtube.com/watch?time_continue=245&v=1BUfYBnTgxw