Site icon Colourmedia News

மஹிந்த இன்றி நாம் வெல்வோம் : தேவையேற்படின் ராஜபக் ஷ எம்முடன் இணையலாம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தற்­போது தஞ்சம் புகுந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் எந்த உறவும் இல்லை. கட்­சியை விட்டு வெளி­யேறி கட்­சியை விமர்­சிக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்  என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எம்­முடன் இணைய  வேண்­டுமே தவிர நாம் அவர்­க­ளுடன் கைகோர்க்க எந்த தேவையும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ இல்­லா­மலும் தேர்­தல்­களை வெற்­றி­கொள்வோம் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும்போதே அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

உள்­ளூ­ராட்சி சபைத்தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட பல சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. மேலும் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு செயற்­ப­ட பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் வரு­கின்­றன.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எப்­போதும் உறு­தி­யான கட்­சி­யான மக்­களின் கட்­சி­யாக இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றது. வேறு யாரையும் நம்­பியோ அல்­லது இன்­னொரு கட்­சியின் தயவில் இருந்தோ எம்மை தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்டும் என்ற நிலைமை வர­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் உறு­தி­யான கட்­சி­யாக நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எந்த சின்­னத்தில் போட்­டி­யிடும் என்­பது இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன, கை சின்­னமா அல்­லது வெற்­றிலை சின்­னமா என்­பதை விரைவில் அறி­விப்போம். மேலும் பொது­ஜன முன்­னணி என்­பது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அல்ல. பொது­ஜன முன்­ன­ணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அவர்­க­ளுடன் எந்­த­வித உறவும் எமக்கு இல்லை. அவ்­வாறு இருக்­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து வாக்­கு­களை பெற்­றுக்­கொண்ட, வசப்­பி­ர­சா­தங்­களை பெற்­றுக்­கொண்ட நபர்கள் தேர்­தலில் பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்­து­கொண்டு கட்­சியை விமர்­சிப்­பார்­க­ளாயின் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மற்றும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தீர்­மானம் எடுத்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை வீழ்த்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­து­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்க நிலைக்கும் நகர்­வு­களை வேடிக்கை பார்க்­கப்­போ­வ­தில்லை. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மட்­டு­மல்ல மாகா­ண­சபை, பிர­தே­ச­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் இது பொருந்தும்.

உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரார்கள் நாங்கள் தான் என மேடை­களில் ஏறி சவால் விடும் நபர்கள் ஒன்றை விளங்­கிக்­கொள்ள வேண்டும். நீங்கள் உண்­மை­யான ஸ்ரீலங்கா கட்சிக் காரர்கள் என்றால் விகா­ரை­களில், பொது மேடை­களில் இருந்து கருத்­துக்­களை முன்­வைக்­காது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு வந்து எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­காரர் என்றால் அவர் இங்கு வர­வேண்டும். மாறாக அவ­ரைத்­தேடி நாம் செல்­ல­வேண்டும் என்ற தேவை ஏற்­ப­ட­வில்லை. அவரை நம்பி நாம் களத்தில் இறங்­க­வில்லை. அவர் இருந்­தாலும், இல்­லா­விட்­டலும் நாம் தேர்­தலில் வெற்­றியை பெற்­றுக்­காட்­டுவோம். மஹிந்த ராஜபக் ஷ இல்­லா­விட்­டலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தேர்­தலை வெற்­றி­கொள்ள முடியும். கடந்த இரண்டு தேர்­தல்­களின் முடி­வு­களும் அனை­வ­ருக்கும் நினைவில் இருக்கும் என நம்­பு­கின்றேன். எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யாக நாம் அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும். 95 உறுப்­பி­னர்­களும் இணைந்து செயற்­பட்டால் எம்மால் பல­மான ஆட்­சியை உரு­வாக்க முடியும்.

எனினும் தேசிய அர­சாங்­கத்தை விட்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெளி­யே­றப்­போ­வ­தில்லை. அதற்­கான கட்­டளை எமக்கு இன்னும் வர­வில்லை. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் என்­பது வேறு தேசிய அர­சாங்­கத்தில் நாம் அங்கம் வகிப்­பது வேறாகும். தேசிய அர­சாங்­கத்தை பல­மாக முன்­னெ­டுத்து சென்று பிரச்­சி­னை­களை வெற்­றி­கொள்ள வேண்­டிய பொறுப்பு எம் அனை­வ­ருக்கும் உள்­ளது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரு இலக்­கினை நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் நாமும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. நாட்டின் ஊழல், குறித்து நட­வ­டிக்கை எடுப்­பதில் ஜனா­தி­பதி உறு­தி­யாக உள்ளார். மத்­திய வங்கி விட­யத்தில் அவர் நடந்­து­கொண்ட விதம் அனைத்து தலை­வர்­க­ளுக்கும் நல்­ல­தொரு முன்­னு­தா­ர­ண­மாகும். அதேபோல் பிர­தமர் தாமாக முன்வந்து விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமை சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆகவே இந்த ஆட்சியில் சட்டம் நீதிக்கு கீழ்ப்பட்டே அனைத்து செயற்பாடுகளும் உள்ளன என்பதை அரசாங்கம் நிருபித்து வருகின்றது. இம்மாதம் 8 ஆம் திகதி மத்திய வங்கி பிணைமுறி விடயம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அதன் பின்னர் நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கும் என்பது உறுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version