Site icon Colourmedia News

ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா? (சிறப்பு கட்டுரை)

(ஞாயிறு வீரகேசரி பத்திரிக்கையில் வெளிவந்த சிறப்பு கட்டுரை) 

ரஜினி சுய­மாக இயங்­கு­கிறாரா? இயக்­கப்­­டு­கிறாரா ? இயக்­கப்­­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் ? எதற்­காக இயக்­கப்­­டு­கின்றார்? என்றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­­டை­யா­னது.

ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை உறு­திப்­­டுத்­து­­தாக இருக்கின்­றன. அதனை மென்­மேலும் உறு­திப்­­டுத்தும் வகையில் அவர் சில தினங்க­ளுக்கு முன்னர் தூத்­துக்­கு­டிக்கு மேற்­கொண்ட விஜ­யமும் அங்கு அவர் எதிர்கொண்ட எதிர்ப்­புக்­களும் அவர் தெரி­வித்த கருத்­துக்­களும் அமைந்­துள்­ளன.

கடந்த 30 வரு­­கா­­மா­கவே அர­சி­யலில் ஈடு­படப் போவ­தாக தெரி­வித்­து­வரும் ரஜினி இது­வரை கட்­சியை அமைக்­­வில்லை, கட்­சிக்குப் பெயர் வைக்­கவும் இல்லை. அண்மைக்­கா­­மாக ரஜினிமக்கள் மன்றம்என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ள­துடன் அவ்­வப்­போது தமி­ழக அர­சையும் அரசின் செயற்பாடுகளையும் அமைச்­சர்­­ளையும் விமர்­சனம் செய்து வரு­­தையே வழக்கமாக கொண்­டி­ருக்­கிறார்.

எதிர்­வரும் தமி­ழக சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அனைத்துத் தொகு­தி­­ளிலும் போட்டி­யிட்டு ஆட்­சியைப் பிடிக்­கப்­போ­­தா­கவும் தனது ஆட்சிஆன்மிகஆட்சியாகவே இருக்கும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆன்­மிக ஆட்சி என்பதற்கு அவர் இது­வரை சரி­யான விளக்­­­ளிக்­­வில்லை .

இந்­தியா ஒரு மத­சார்­பற்ற நாடு. இந்­துக்கள் அதி­­மாக வாழ்ந்­தாலும் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்­லிம்­களும் ,கிறிஸ்­­வர்­களும், சீக்­கி­யர்­களும் வாழ்கின்­றனர். இவர்­களில் எவ­ரையும் ஒதுக்­கி­விட்டு ஆட்­சியைப் பிடிக்­கவோ அல்லது ஆட்சி நடத்­தவோ முடி­யாது. ஒன்­றுடன் ஒன்­றாகப் பிண்ணிப் பிணைந்துள்ளன.

தமி­­கத்தைப் பொருத்­­­ரையில் சகல மதத்தைச் சேர்ந்த மக்­களும் சமா­தா­­மாக ஒற்­று­மை­யாக, சகோ­­ரத்­து­வத்­துடன் வாழ்­கின்­றனர். இந்­தி­யாவில் வேறு எந்த மாநிலத்­திலும் இல்­லாத மத ஐக்­கியம் தமி­­கத்தில் காணப்­­டு­கி­றது. கடந்த காலங்களில் இந்த ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­­தற்கு இந்­துத்வா அமைப்­புக்கள் தீவிர முயற்­சி­களை .மேற்­கொண்­டன. அது மத ரீதி­யி­லான சாதி ரீதி­யி­லான வன்முறைகளைத் தூண்டும் முயற்­சி­யாக இருந்­­போதும் அது எடு­­­வில்லை.

இவ்­வா­றான நிலையில்ஆன்­மிகஅர­சி­யலைக் கொண்டு வரப்­போ­­தாக அறிவித்ததன் மூலம் எவ்­வா­றான ஆட்­சியைக் கொண்­டு­­ரப்­போ­கிறார் ரஜினி? என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா? பிரச்­சி­னைகளை உரு­வாக்­காதா? என்று சகல தரப்­பி­னரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

ஒரு தெளி­வான கொள்கை என்று எதுவும் இல்­லாமல் ஆட்­சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துடன் மட்டும் ரஜினி செயற்­­டு­­தாக சமூக ஆய்­வா­ளர்கள் ஏற்க­னவே சுட்­டிக்­காட்டி வந்­துள்­ளனர்.

தூத்­துக்­குடி சம்­பவம் பற்றி சகல தரப்­பி­னரும் ஒரு ஒத்தக் கருத்­தினைக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி மற்றும் அவர் சார்ந்­தி­ருக்கும் அமைப்­புக்­களைச் சேர்ந்­­வர்கள் மாத்­திரம் அதற்கு எதிர்­மா­றான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருப்­பது அனை­­ரையும் அதிர்ச்­சி­யிலும் ஆச்­­ரி­யத்­திலும் மூழ்­­டித்­துள்­ளது.

தூத்­துக்­கு­டியில் 13 பேர் கொல்­லப்­பட்­­மையும் நூற்­றுக்­­ணக்­கானோர் தாக்­கு­­ளுக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் பொது மக்­­ளுக்கு எதி­ரான மிக மோச­மான செயற்­பாடு எனவும் அப்­பட்­­மான மனித உரிமை மீறல் செயல்­பாடு எனவும் குற்­றஞ்­சாட்­டப்­­டு­கின்­றது. எதிர்க்­கட்­சிகள் பொது அமைப்­புக்கள், மனித உரிமை அமைப்­புக்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­­ளுக்கு எதி­ரான கண்­­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

எனினும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­களை நியா­யப்­­டுத்தி பா..கவின் தலைவர்­­ளான எச். ராஜா, தமி­ழிசை சௌந்­­­ராஜன், பொன்.இரா­தா­கி­ருஸ்ணன் போன்­றோரும் தமி­­கத்தின் .தி.மு. அர­சியல் வாதிகள் சிலரும் கருத்து வெளியிட்­டி­ருந்­தனர்.

தற்­போது அதே பாணியில் நடிகர் ரஜி­னியும் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது தமி­ழக மக்களி­டையே அதிர்ச்­சியை ஏற்­­டுத்­தி­யுள்­ளது. அரசின் செயற்­பா­டு­களை அதா­வது பொலி­ஸாரின் நட­­டிக்­கையை நியா­யப்­­டுத்தும் வகையில் ரஜினி பேசி­யி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்­­டுத்­தி­யுள்­ளது.

தூத்­துக்­குடி சம்­பவம் நடை­பெற்று ஒரு வாரத்தின் பின்னர் நிலை­மை­களை பார்வையிட ரஜினி அங்கு சென்றார். பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்த அவ­ரிடம் மக்கள் கேட்ட கேள்­வி­­ளுக்கு பதி­­ளிக்க முடி­யாமல் திணறிப் போயி­ருக்­கிறார். எல்­லா­வற்­றுக்கும் மேலாக நலம் விசா­ரித்த ரஜி­னி­யிடம்நீங்கள் யார்? எங்­கி­ருந்து வரு­கி­றீர்கள்? “ என்று முகத்தில் அடித்தாற் போல் கேள்வி கேட்ட தூத்­துக்­குடி இளைஞனின் ஆதங்­கமும் வெறுப்பும் ரஜி­னியை நன்­றா­கவே அதிர்ச்­சி­­டையச் செய்­துள்­ளது என்­பதை மறுக்­­மு­டி­யாது.

சென்ற இடத்­தி­லெல்லாம் மக்கள் கேட்ட கேள்­வி­­ளாலும் காட்­டிய வெறுப்புக்களாலும் அதிர்ச்­சியும் கோப­மு­­டைந்த ரஜி­னிகாந்த் அதனை பின்னர் பத்­தி­ரி­கை­யா­ளர்­­ளிடம் வெளிப்­­டுத்­தி­யி­ருந்தார் அப்­போது பத்திரிகையாளர்களின் கோபத்­துக்­குள்­ளா­னதும் உண்மை.

பொது­வாக தங்­­ளது உரி­மை­­ளுக்­கா­கவும் தேவை­­ளுக்­கா­கவும் நல்ல விடயங்களுக்­கா­கவும் வீதியில் இறங்கி போராடும் மக்­களை தீவி­­வா­திகள், பயங்கர­வா­திகள், சமூக விரோ­திகள் என்று அர­சாங்­கங்கள் குற்­றஞ்­சாட்டி வரு­வது புதிய விட­­மல்ல. இது சகல நாடு­­ளிலும் நடந்­து­வரும் விட­­மாகும். ஆட்சியிலிருக்கும் கட்­சி­களின் மக்கள் விரோத செயற்­பா­டு­­ளுக்கு எதி­ராக எதிர்க்கட்­சிகள் போராட்டம் நடத்­தும்­போது அதனை தேச விரோத செயற்­பா­டுகள் என ஆளும்­கட்சி குற்­றஞ்­சாட்­டு­வதும் பின்னர் எதிர்க்­கட்சி ஆட்­சிக்கு வந்­ததும் அதே குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­விப்­பதும் வழக்­­மாகும்.

தமிழ் நாட்டைப் பொறுத்­­­ரையில் ஆரம்பம் முதற்­கொண்டே பா.. மீது மக்களுக்கு நல்­­பிப்­பி­ராயம் இல்லை. பா...வின் செயற்­பா­டுகள் இந்­துத்வா ஆதிக்கம், சிறு­பான்­மை­யி­­ருக்கு எதி­ரான செயற்­பா­டுகள், திரா­விடக் கட்­சி­களை ஒழிக்க வேண்­டு­மென்ற பிர­சாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் இதற்குக் கார­­மாக இருக்­கின்­றன.

எனவே அண்மைக் கால­மாக பா..கவினர்தமி­ழகம் பயங்­­­வா­தி­களின் கூடாரமாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றதுஎன்று தெரி­வித்து வரு­கின்­றது. அவ்வாறானவர்­களை அடை­யாளம் கண்­டுள்­­தாக தெரி­வித்து வரும் அதே­வேளை அவர்­களை பகி­ரங்­­மாக வெளிப்­­டுத்­து­­தையும் தவிர்த்து வரு­கி­றது. இத­னையே தமி­­கத்தில் இடம்­பெறும் போராட்­டங்­களின் போதெல்லாம் தெரி­வித்து வரு­கி­றது.

இது ஒரு­பு­­மி­ருக்க மக்­களின் உரி­மை­­ளுக்­கா­கவும் தேவை­­ளுக்­கா­கவும் தமி­ழக வாழ்­வு­ரி­மைக்­­ழகத் தலைவர் வேல்­மு­ருகன் நாம் தமிழர் கட்­சித்­­லைவர் சீமான் மே– 17 அமைப்பின் தலைவர் திரு­மு­ருகன் காந்தி உள்­ளிட்ட பலர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

மக்­­ளுக்­காக போராடும் இது­போன்ற தலை­வர்கள் தூத்­துக்­குடி கல­வர பூமி சென்று பார்­வை­யிட அனு­மதி கோரி­­போது அதற்கு அரசு அனு­மதி வழங்­­வில்லை. அதேவேளை ரஜி­னி­காந்­துக்கு அர­சாங்கம் தூத்­துக்­குடி செல்ல அனு­மதி வழங்­கி­யது. வேல்­மு­ரு­கனும் சீமானும் மக்கள் பிர­தி­நி­தி­யா­கவே தூத்­துக்­குடி செல்ல அனு­மதி கேட்­டனர். ஆனால் ரஜினி, மக்கள் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா? அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா? என்ற கேள்வி எல்­லோ­ரி­டமும் எழுந்தது.

அர­சின்­மீது கோபமும் அதி­ருப்­தியும் கொண்­டுள்ள தூத்­துக்­குடி மக்­­ளிடம் அரசு பொலி­ஸாரின் செயற்­பா­டு­களை நியா­யப்­­டுத்­தவும் அர­சுக்கு எதி­ரான தப்­பான அபிப்­பி­ரா­யத்தை இல்­லாமல் செய்­­தற்­குமே ரஜினி அங்கு அனுப்­பப்­பட்டார். ரஜினி சென்று சொன்னால் அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்ற திட்­டத்­து­­னேயே அனுப்­பப்­பட்டார். ஆனால் அங்கு நடந்­ததோ வேறு! மக்கள் ரஜி­னியை நிராகரித்தனர். எதிர்ப்­பையே எதிர்­கொண்டு ரஜினி சென்னை திரும்­பினார்.

ஜல்­லிக்­கட்டு போராட்டம் நடை­பெற்ற போது அது தீவி­­­டை­­தற்கு சமூக விரோதிகளே காரணம் என்று தெரி­வித்­தி­ருந்த ரஜினி தற்­போது தூத்­துக்­கு­டியில் மக்கள் நடத்­திய போராட்டம் தாக்­கு­தலில் முடி­­டை­­தற்கும் சமூக விரோ­தி­களே காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார்.

தூத்­துக்­கு­டியில் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை எதற்­காக மூடும்­படி போராட்டம் நடத்­தி­னார்கள். அந்­தப்­போ­ராட்டம் ஏன் நடத்­தப்­பட்­டது என்­பதைப் பற்­றி­யெல்லாம் ரஜினி சிந்­திக்­­வில்லை. இறு­தியில் 100நாட்­களின் நிறைவில் போராட்டம் எதற்­காக உச்­சிக்­கட்­டத்தை அடைந்­தது என்­பது பற்­றியும் பொது­மக்கள் மீது துப்­பாக்கிப் பிரயோகம் செய்­யும்­படி உத்­­­விட்­­வர்கள் பற்­றியும் ரஜினி சிந்­திக்­­வில்லை. பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யது பற்­றியும் சமூக விரோ­திகள் செயற்­பா­டு­களே காரணம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

எடுத்­­தற்­கெல்லாம் போராட்டம் நடத்­தினால் தமிழ்­நாடே சுடு­காடு ஆகி­விடும் என்று பேசி­யி­ருக்­கிறார். மக்கள் எதற்­காக போராட்டம் செய்­கி­றார்கள்? அவர்­­ளது தேவை என்ன? அவர்­­ளுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உணராத ரஜினியால் எவ்வாறு மக்களுக்கு தலைமை கொடுக்கமுடியும்? ஒரு மாநிலத்துக்கு எப்படி தலைமை தாங்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் திராவிடக் கொள்கையில் ஊரிப்போன தமிழக மக்களை திசைத் திருப்புவதற்கு வடஇந்தியாவின் இந்துத்வா ஆதிக்க சக்திகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா... போன்ற கட்சிகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஜெயலலிதா மறைவின் பின்னர் .தி.மு.. ஊடாக அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதும் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளவரும் தமது கொள்கைக்கு சார்பானவருமான ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி குறித்த சக்திகள் தமது திட்டத்தை செயற்படுத்த முனைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஜினியை இயக்கும் சக்திகளின் திட்டத்தை ரஜினி செயற்படுத்த முனைகின்றாரா? அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா? என்பதை காலமே தீர்மானிக்கும்.

Exit mobile version