Site icon Colourmedia News

இருநாட்டு ஜனாதிபதிகளும் சந்திக்கவுள்ள நேரம் வெளியிடப்பட்டது

அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்த காலத்தில் அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

ஜூன் 12ம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் 12ம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

ஜூன் 12ம் திகதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

Exit mobile version