Site icon Colourmedia News

ஶ்ரீலசுக வின் நிர்வாக பொறுப்புக்களில் தற்காலிக மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக பொருளாளராக அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்லியூ.டி.ஜே செனவிரத்ன மற்றும் அநுர பிரயதர்ஷன யாபா ஆகியோர் சிரேஷ்ட துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன ஆகியோர் கட்சியின் ஆலோசனை குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version