அனைத்து புகையிரத சேவை ஊழியர்களது விடுமுறைகளையும் இரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று (29) மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முடிவு செய்த பிரகாரம் இன்று (29) பிற்பகல் 4 மணியில் இருந்து தமது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.