Site icon Colourmedia News

நீர்கொழும்பு கெடமரன் லயன்ஸ் கழகத்தினரால் வெள்ளை பிரம்பு தினம் நினைவாக கண்பார்வையற்ற கிராமத்தினருக்கு உதவிகள்

நீர் கொழும்பு கெடமரன் லயன்ஸ் (Lions club of negombo catamaran district 306B1) கழகத்தினரால்  வெள்ளை பிரம்பு தினம் நினைவாக நீர்கொழும்பு கடான பிரதேசத்தில் அமைந்துள்ள கண்பார்வையற்றோர் கிராமத்தினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வானது  கடந்த ஞாயிற்று(3) கிழமை நீர்கொழும்பு கடான நயனாகம  கண்பார்வையற்றோர் கிராமத்தில்  அமைந்துள்ள  சன சமூக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  லயன்ஸ் கழக ஆளுநர் கெம்லஸ் பர்னாந்து(DISTRICT GOVERNOR LION CAMILUS FERNANDO) அவர்களும் மற்றும் கெடமரன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் அவர்களுடன் ஏனைய லயன்ஸ் கழக உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

1984ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அவர்களால் கம உதாவ  வேலைதிட்டத்தில் கீழ்   கண்பார்வையற்ற குடும்பங்களுக்கு நீர்கொழும்பு கடான பிரதேசத்தில் கிராமம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தற்போது இக் கிராமத்தில் 50கண்பார்வையற்ற  குடும்பங்கள் உள்ளன இக் குடும்பங்களில்  90க்கும் அதிகமான பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளனர்.

இலங்கையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நீர் கொழும்பு கெடமரன் லயன்ஸ் கழகம் இவ்வருடம் தமது சேவைகளில் ஒன்றாக இக் கிராமத்தினருக்கு ஏனைய லயன்ஸ் கழகத்தினருடன் இணைந்து  சுமார் ஐந்து லட்சம் ருபாய் பெறுமதியான  பாடசாலை உபகரணங்கள், பல்வேறு பொருட்கள் ,மற்றும் நிதி உதவிகள் செய்தனர்.

மேலும் இக் கிராமத்தில் பயன் படுத்த முடியாத நிலையில் இருந்த சிறுவர் பூங்காவை புனரமைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

Exit mobile version