Site icon Colourmedia News

கல்வி அமைச்சினால் கர்பிணி ஆசிரியைகளுக்கு சீருடை அறிமுகம்

கர்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் சீருடை கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யபட்டள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது.இதன் போது சீருடை மற்றும் சுற்று நிறுபமும் வெளியிடப்பட்டன.

இதுதொடர்பாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:

பாடசாலை முறைமையில் தற்போது கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 236¸000 ஈடுபட்டுள்ளதுடன் இவர்களில் 172¸000 ஆசிரியைகள் உள்ளனர். வருடாந்தம் சுமார் 10¸000 ஆசிரியைகள் மகப்பேற்று விடுமுறையில் செல்கின்றனர். ஆசிரியர் தொழில் கௌரவமிக்க தொழிலாக கருதப்படுகிறது. நாட்டின் எதிர்கால சந்ததியினரை நற்பிரஜைகளாக மாற்றியமைப்பதற்காக முன்மாதிரியாகச் செயற்படுவதற்கு ஆசிரியர்கள் அற்பணிப்புச் செய்துள்ளனர். இதனால் ஆடைகள் ஆசிரியர்கள் தொழிலின் கௌரவத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. ஆசிரியைகள் கற்பிணிக் காலத்திலும் தமது தொழில்சார் கௌரவம்¸ சம்பிரதாயம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் ஆடை அணிகலங்களைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

சுமார் 06 வடிவங்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.; கர்பிணிக் காலத்தில் இறுதி ஒரு சில மாதங்களுக்குள் ஏற்படக்கூடிய உடல்சார்ந்த சிரமங்கள் தொடர்பில் கருத்தி கொள்ளும் போது வசதியான ஆடையினை அணிவது மிகவும் பொருத்தமானதாகும். கர்பிணிக் காலத்தில் மிகவும் வினைத்திறனைப் போன்று உற்பத்தித் திறன் மிக்க சேவையினை வழங்குவதற்காகப் பொருத்தமான வகையில் தொழிலின் கௌரவத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படாத இலகுவான ஆடைகளை அறிமுகப்படுத்துவது நோக்கமாகும்.

அத்துடன் இந்த ஆடை கட்டாயமல்ல என்பதுடன்¸ கற்ப காலத்தில் ஆசிரியைகளின் விருப்பத்திற்கமைய பயன்னடுத்த முடியும். குறிப்பிடப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கக் கூடியவாறு ஆடைகள் தயாரிக்கப்பட வேண்டியதுடன்¸ இதற்குப் புறம்பாக பல்வேறுபட்ட அலங்கார வடிவமைப்புக்களை இட முடியாது. அவற்றில் ஆடையின் உள்ளடக்க இடைவெளி – கற்பகாலத்தில் கிரமமாக அதிகரிக்கும் வயிற்றின் அளவினைக் காரணமாகக் கொண்டு ஆடையின் பின்பக்கத்திற்கு இணைவாக முன்பக்கத்திலும் சமநிலைமை குறைவடைந்து செல்கின்றது. இதனால் ஆடையின் சமநிலையைப் பாதுகாப்பதற்காக மேலதிக இடைவெளி ஆடையில் இணைக்கப்பட வேண்டும். இம் மேலதிக இடைவெளியினைப் பேணுவதைப் போன்று ஆடைக்கு அலங்காரத்தையும் வழங்குவதற்காக ஆடைக்கு தடிப்பான பட்டியினை இட வேண்டும்.

அளவு உயரம் – ஆடையினை இலகுவான முறையில் செயற்படுத்துவதற்காகவும்¸ தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும் முழுங்காலிலிருந்து கீழாக கெண்டைக் கால் வரை உயரத்திற்கு இருக்க வேண்டும். பெண்களின் உடலில் அலங்காரத்தைக் காண்பிக்க பிரதான காரணியாக அமைவது உயரமாகும். குற்பிணிக் காலத்தில் விரிவடையும் வயிற்றிற்கு இணைவாக உடம்பின் உயரம் குறைவாகத் தென்படுகின்றது. எனவே வயிற்றுக்கு குறுக்காகச் செல்லும் நேர் வரைவு வடிவமைப்பு கொண்ட பொக்ஸ்பிளீட் ஒன்றை இட வேண்டும்.

தோள்பட்டையைப் போதியளவு மூடுதல் – கற்ப காலத்தில் கிரமமாக அதிகரிக்கும் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியின் அளவு பெண்கள் உடல் அமைப்பில் பாரிய மாற்றங்களுக்கு உட்படுகின்றது. இதனால் தோள்பட்டையினைப் போதியளவு இருப்பினும் அழகான முறையில் மூடக்கூடியவாறு அழகான கொளர் இடவேண்டியதுடன் இந்த கொளர் பின்பக்கம் வரை இணைப்பணைக் கொண்டதாக இருக்க வேண்டும். கொளர் ‘பின்டக்ஸ்’ என்ற அடிப்படையில் கொளரின் மேற்பக்கத்தில் தையல் இடுவது மிகப் பொருத்தமானதாகும்.

ஆடையின் வெளித் தோற்ற அலங்காரம் – நிற வகை – இலங்கை வெப்பமண்டல வலய நாடு என்பதுடன் பெரும்பான்மையான மக்களின் தோலின் நிறம் கபில நிறத்துக்கு சமமானதாகும். இதனால் நிறத்தினைக் காண்பிக்கக்கூடிய வகையிலான நிறங்களைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாகும்.இதற்காக இளம் பச்சைந pற வகைகளையும்¸ இள மண் நிற வகைகளையும் இளம் செம்மஞ்சள் நிறத்தை அல்லது வெள்ளை ஃ சாம்பல் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான துணி வகை – இவ் ஆடைக்காக சிறிய நிறைகொண்ட இலகுவான பட்டுக்கலந்த சலேஞ்சர்¸ விஸ்கோஸ் போன்ற துணி வகைகளைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாகும். இந்தத் துணி இரண்டிற்கும் உடலை மறைக்கக் கூடிய இயலுமை இருப்பதனால் ஆடைக்கு உhயி வடிவத்தைக் கொடுத்துத் தைப்பதற்கு வசதியான இருப்பதற்கும்¸அதனை அணிவதற்கும் வசதியாகவும் இருப்பதும் இந்த துணி வகை மிகவும் பொருத்தமானதாகும்.

கழுத்து வடிவம்- – வசதி¸ அலங்காரம் மற்றும் ஒழுக்க விழுமியம் தொடர்பில் கவனம் செலுத்தி நீளமற்ற அகல வட்ட வடிவில் இடப்பட வேண்டும்.
ஆடையின் கைகளை இடல் – கை வைப்பது கட்டாயமாகும்.உடம்பின் உயரத்தைக் காண்பிக்கக்கூடிய வகையில் குறுக்காக செல்லக் கூடிய வகையில் பொக்ஸ்பிளீட்இட்டு அழகுபடுத்தக்கூடியவாறு கையின் உயரம் அதற்கிணைவாக இருக்க வேண்டும். இது தோள்பட்டையின் முனையில் சிறிய மடிப்புக்கள் மூன்று கொண்டதாக கிரமமாக முழங்கை வரை செல்லக் கூடிய வகையில் இலகுவாக மற்றும் சௌவ்கரியம்மிக்கதாக தைக்க வேண்டும்.

.
ஆடையின் பின்பகுதி – ஆடையின் பின்பகுதியில் வடிவமைப்புடன் அழகுபடுத்துவத ஆடைக்கு சிறந்த வடிவமைப்பை வழங்குவதைப் போன்று அணிவதற்கு இலகுவாக அமைகின்றது.நடுப்பகுதி ஊடாக செல்லும் வெளியே காணாத வகையில் சிபர் இட வேண்டும்.

ஆடையின் உட்பகுதி – ஆடையின் வடிவமைப்பினை முறையாகப் பேணுவதற்காகவும் வெளியே தென்படுவதைத் தடுப்பதற்காகவும் உட்பகுதியில் முழுமையாக லைனிங் இடுவது அத்தியாவசியமாகும்இதற்காக பட்டாடையினைப் பயன்பாடுத்துவது பொருத்தமானதாகும். இதன் மூலம் வியர்வையினை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுவதுடன் கற்பிணிப் பெண்ணுக்கு வசதியாகவும் அமைகின்றது.

ஆடையின் ஒரு பகுதியாக காற்சட்டையினைப் பயன்படுத்தல். – சிங்களம்¸ தமிழ்¸ முஸ்லிம்¸ பேகர் போன்ற பல்வேறுபட்ட சமயங்களைப் பின்பற்றக்கூடிய ஆசிரியர்கள் கல்வித் துறையில் சேவையாற்றுகின்றனர். இருப்பினும் காற்சட்டை அத்தியாவசியமாக அமைவதில்லை என்பதுடன் இனங்களுக்கமைய மற்றும் சமயங்களுக்கமைய தேவையானோருக்கு இதனைப் பயன்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. இது எவ்வாறாக இருப்பினும் உடல் ரீதியான வசதிகளுக்கு அமைய இதனை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆடை தைக்கப்பட வேண்டிய முறை அறிமுகம்படுத்தபட்டள்ளது. இதற்கமைவாக பயன்படுத்துவதற்காக வழிகாட்டல்களின் தேவைகளுக்கு அமைய பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவது அதிபரின் பொருப்பாகும். இது கர்ப காலத்தில்10 ஏற்படக் கூடிய சிரமங்களைத் தவிர்த்து வசதியுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்படும் சலுகையாக அமையும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்துக் கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவர்களுடன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி¸ வைத்தியர்கள்¸ பல்கலைகழக விரிவுரையாளர்கள். அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டளர்.

 

Exit mobile version