தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான அடிப்படை தேவைகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பியருக்கான வரி குறைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பாரிய லாபமாகும். யார் என்ன சொன்னாலும் பியருக்கான வரி குறைப்பை வரவேற்கின்றேன் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் அடுத்தவருட வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.