Site icon Colourmedia News

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள  எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version